Thursday, May 26, 2011

வடிவேலு இடத்தை நிரப்புவாரா கஞ்சா கருப்பு!

வடிவேலுவை ஒப்பந்தம் செய்வதில்லை என்று கிட்டத்தட்ட முடிவே செய்துவிட்டார்கள் தமிழ் சினிமாக்காரர்கள்.

இப்போது வடிவேலுவுக்காக உருவாக்கப்பட்ட பாத்திரங்களில் ஒப்பந்தமாகிக் கொண்டிருப்பவர் கஞ்சா கருப்பு. தேர்தல் முடிவுக்குப் பிறகு, இப்படி கஞ்சா வசம் போன படங்களின் எண்ணிக்கை மூன்று. Ganja Karuppu

அதில் முக்கியமான படம் மன்னார் வளைகுடா. இந்தப் படத்தில் ஹீரோ கம் காமெடியன் வேடம். இயக்குபவர் மாதேஷின் முன்னாள் உதவியாளர் தனசேகரன். மீனவர்கள் பிரச்சினையைப் பேசும் நகைச்சுவைப் படம் இது. ஆரம்பத்தில் வடிவேலுதான் இந்தப் படத்தில் நடிப்பதாக இருந்தாராம். யோகா என்ற பெங்களூர் மாடல்தான் இதில் ஹீரோயின்.

தேர்தல் முடிவுக்கு முன்பே, வடிவேலு தூக்கப்பட்ட படம் ராணா. இதில் அவருக்கு தரப்பட்ட வேடத்தை கஞ்சா கருப்புவுக்கு கொடுத்துள்ளனர்.

இன்னும் சில படங்களிலும் வடிவேலுவுக்கு எழுதி வைத்த ட்ராக்கில் கஞ்சா கருப்புவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

வடிவேலுவுக்கு பதில் ஒப்பந்தம் செய்வதெல்லாம் சரி... அவரளவுக்கு காமெடியில் கலக்கி புதிய இடத்தை தக்க வைத்துக் கொள்வாரா கஞ்சா கருப்பு என்பதுதான் இப்போதைய கேள்வி!

2 comments:

  1. பார்ப்போம்...
    அரசியல் காரணங்களுக்காக வடிவேலை ஓரம் கட்டுவது எனக்கு சரியாக படவில்லை..

    ReplyDelete
  2. Politics involvement is an individual right of an human beings. If anybody try to compromise Vadivelu's performance with other actor,because of his political involment, then it is meaningless on human rights. Then the film Industry people no way to criticize about RajaPakjee or Elam war of Independence.

    ReplyDelete