Thursday, May 26, 2011

தாவூத் இப்ராகிமின் காதலியான இலியானா...?

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு உட்பட பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு, இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதிகளின் லிஸிட்டில் நம்பர்-1 இடத்தில் இருக்கும் நிழல்உலக தாதா தாவூத் இப்ராகிமின் வாழ்க்கையை இந்தியில் படமாக எடுக்க இருக்கின்றனர். இதில் தாவூத்தின் காதலியான மந்தாகினி வேடத்தில் நடிகை இலியானா நடிக்கப்போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
ileana to acts as dawood ibrahims girlfriend role

இதுகுறித்து இலியானா கூறியதாவது, தாவூத் இப்ராகிம் வாழ்க்கை வரலாறு படமாக உருவாவதாகவும், அவரது காதலி வேடத்தில் நான் நடிப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.  இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இந்திபடம் ஒன்றில் நான் நடிக்க இருக்கிறேன். அதில் எனக்கு என்ன கேரக்டர், எப்படிப்பட்ட கதை என்பதை எல்லாம் இப்போது கூற முடியாது. அதற்கான நேரம் வரும்‌போது நானே கூறுவேன். 

தற்‌போது ஷங்கரின் இயக்கத்தில், நண்பன் படத்தில் நடிக்கிறேன். அந்தமானில் நடந்த சூட்டிங்கில் நீண்ட தூரம் படகில் பயணம் செய்தோம். அதனால் எனக்கு உடம்புக்கு முடியாமல் போனது. இப்போது சரியாகி மீண்டும் நடிக்கத் தொடங்கியிருக்கிறேன். சமீபகாலமாக என்னுடைய படங்கள் தோல்வியடைவதை பற்றி கேட்கின்றனர். ஒவ்வொரு படத்தில் நடிக்கும்போது கஷ்டப்பட்டு தான் நடிக்கிறேன். இருந்தும் தோல்விக்கான காரணத்தை என்னால் கண்டறிய முடியவில்லை. இனி வரும் காலங்களில் இதுபோன்று வராது பார்த்துக்கொள்வேன் என்று கூறுகிறார்

No comments:

Post a Comment